தனமல்விலவில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

தனமல்விலவில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

தனமல்விலவில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2020 | 3:33 pm

Colombo (News 1st) நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில், தனமல்வில பிரதேசத்தில் புதையல் தோண்டிய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகலை மாவட்ட தொல்பொருளியல் திணைக்களத்தினரும் தனமல்வில பொலிஸாரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அரம்பேகம விகாரையின் முன்றலில் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்களே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சில இடங்களை இவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 50, 60 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்