டெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை 

டெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை 

டெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை 

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2020 | 6:41 pm

Colombo (News 1st) டெங்கு நோய் அதிகம் பரவும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (01) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலவும் மழையுடனான வானிலை குறைவடைந்ததன் பின்னர் பரவக்கூடிய டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்குத் துரிதமாக தயாராகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடத்தின் முதலாம் காலாண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூடி சுகாதார குழுவினரின் திட்டங்களை செயற்படுத்துமாறு இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்