கம்பளை பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கம்பளை பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கம்பளை பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2020 | 4:16 pm

Colombo (News 1st) கம்பளை – சில்வர்ஸ்டார் தல்பிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) காலை தோட்டதுப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் கிணற்றை மூடியிருந்த தகரத்தின் மீது ஏறிய நிலையில் தவறி வீழ்ந்துள்ளார்.

கம்பளை அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்