by Staff Writer 01-06-2020 | 2:37 PM
Colombo (News 1st) சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று (01) சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து குறித்த அமைச்சுப் பதவியை பிரதமர் பொறுப்பேற்றுள்ளார்.