அசாதாரண வானிலை – தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்

அசாதாரண வானிலை – தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்

அசாதாரண வானிலை – தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

01 Jun, 2020 | 3:47 pm

இந்தியாவின் வட பகுதியில் பெய்துவரும் கன மழையை தொடர்ந்து சுற்றுலா முக்கியத்துவமிக்க உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் சிறு சேதத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலின் வட பகுதியில் இவ்வாறு சேதமேற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இடியுடன் கூடிய வானிலையை தொடர்ந்து குறித்த பகுதியின் மேற்கூரைக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

பளிங்குகளாலான இந்த கூரை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு நிலைமையை கருத்திற்கொண்டு சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்