9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா

9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வௌிக்கு அனுப்பியுள்ள நாசா

by Staff Writer 31-05-2020 | 7:50 AM
Colombo (News 1st) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 9 வருடங்களின் பின்னர் முதல்தடவையாக இரு விண்வௌி வீரர்களை நாசா அனுப்பியுள்ளது. SpaceX ரொக்கெட் நிறுவனத்துக்கு சொந்தமான, SpaceX Falcon 9 என்ற விண்கலத்தின் மூலம் நாசாவின் விண்வெளி வீரர்களான Doug Hurley மற்றும் Bob Behnken ஆகிய இருவரும் அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குறித்த விண்வௌி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக பயணம் நிறுத்தப்பட்டது. ரொக்கெட் புறப்படவிருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனமான SpaceX நிறுவனத்துடன் இணைந்து முதல் தடவையாக நாசா முன்னெடுக்கும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகின்றது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல்தடவையாக SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது.