ஊரடங்கை மீறிய 86 பேர் கைது

ஊரடங்கை மீறிய 86 பேர் கைது

by Staff Writer 31-05-2020 | 1:15 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறிய 86 பேர் 6 மணித்தியாலங்களுள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (31) அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,921 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 18,847 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 23,636 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.