புத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்

புத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்

புத்திஜீவிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2020 | 11:32 am

Colombo (News 1st) கொரோனா அபாயம் காரணமாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான நடைமுறைகளை பரிந்துரைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் ​தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

பரிந்துரைகளை மீளாய்வு செய்து பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பிரசார பணிகள் தொடர்பான பரிந்துரைகள் தொடர்ந்தும் கிடைப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நடத்துவது தொடர்பில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் உரிய பிரிவுகளுடன் கலந்துரையாடடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்