சொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் ஒருவர் கைது 

சொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் ஒருவர் கைது 

சொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

31 May, 2020 | 10:24 am

Colombo (News 1st) இரத்மலானை – சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் அங்குலான – மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 34 ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், 2018 ஆம் ஆண்டில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர், ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்கேநபரிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்றும் சிம் அட்டையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி இரத்மலானை – சொய்சாபுர ஹோட்டலுக்கு சென்ற அடையாளந் தெரியாத சிலர், தன்னியக்க துப்பாக்கியின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றனர்.

சந்தேகநபர் இன்று (31) கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்