இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2020 | 6:55 am

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (01) முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை வழமைபோன்று, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்