ரஷ்யாவில் 181 கொரோனா மரணங்கள் பதிவு

ரஷ்யாவில் 181 கொரோனா மரணங்கள் பதிவு

ரஷ்யாவில் 181 கொரோனா மரணங்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2020 | 5:08 pm

Colombo (News 1st) ரஷ்யாவில் இன்று 181 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, ரஷ்யாவில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 4555 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 8952 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ,96,575 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா பிரேஸிலிக்கு அடுத்ததாக ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், 17,47,087 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அங்கு ஒரு 1,02,836 மரணங்களும் பதிவாகியுள்ளன.

பிரேஸிலில் 4 ,65,166 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 27 ,878 மரணங்கள் சம்பவித்துள்ளன.

உலகளாவிய ரீதியில் 59,31,963 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 3,65,051 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்