ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 May, 2020 | 3:47 pm

Colombo (News 1st) நாளை மறுதினம் (01) முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.

ரயிலில் பயணிப்பதற்கு 19,593 பேர் முற்பதிவு செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

33 ரயில்களில் 31,239 ஆசனங்கள் உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

முற்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களைத் தவிர, மேலதிக ஆசனங்கள் காணப்படுவதால், அதில் அலுலக ஊழியர்களுக்கு பயணிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், அதற்காக நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பயணிக்கவுள்ள 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் 11 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும் பயணிக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர, களனிவௌி மார்க்கத்தில் 6 ரயில்கள் அடுத்த வாரத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை, 5,300-க்கும் மேற்பட்ட பஸ்களும் அடுத்த வாரம் முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதுவரை 4,800 பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்