உலக சுகாதார ஸ்தாபனத்துடனான உறவை முறித்துக்கொள்வதாக ட்ரம்ப் அறிவிப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்துடனான உறவை முறித்துக்கொள்வதாக ட்ரம்ப் அறிவிப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்துடனான உறவை முறித்துக்கொள்வதாக ட்ரம்ப் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2020 | 5:38 pm

Colombo (News 1st) உலக சுகாதார ஸ்தாபனத்துடனான அமெரிக்காவின் உறவை நிறுத்திக்கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாளியாக்கும் விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் தோல்வியடைந்துள்ளதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வொஷிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் திறம்பட செயற்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக நிதியினை அமெரிக்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்கா விலகியுள்ளதால் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்