இரண்டு அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இரண்டு அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இரண்டு அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2020 | 3:10 pm

Colombo (News 1st) இரண்டு அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.

பொது நிர்வாக அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திடம் அறிவித்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டமை தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

சைபர் தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்தது.

சைபர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்