by Staff Writer 30-05-2020 | 3:26 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 303 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மும்பையில் தங்கியிருந்த முப்படையை சேர்ந்த 18 உறுப்பினர்கள் இன்று அதிகாலை 4.45 க்கு நாட்டை வந்தடைந்தனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து 285 பேரை ஏற்றிய விசேட விமானம் இன்று அதிகாலை 5.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இன்று அழைத்துவரப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.