ராஜிதவின் மனு மீது மீண்டும் 11 ஆம் திகதி பரிசீலனை

ராஜித சேனாரத்னவின் மனுவை 11 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

by Bella Dalima 29-05-2020 | 3:14 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மீள் பரிசீலனை மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்றத்தினால் பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தரவை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு நியாயமான மற்றும் போதுமான விடயங்கள் முன்வைக்கப்படவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார். ராஜித சேனாரத்னவின் மீள் பரிசீலனை விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது, தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜராகியுள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜித சேனாரத்னவின் மேன்முறையீட்டு மீள் பரிசீலனை மனு தொடர்பில் தமது அடிப்படை ஆட்சேபனைகளையும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இன்று மன்றில் சமர்ப்பித்தார்.