மிஹிந்தலை பிரதேச சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்

மிஹிந்தலை பிரதேச சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 8:05 pm

Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தின் கீழுள்ள மிகிந்தலை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மீது அக்கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மிஹிந்தலை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் உபாலி ஆனந்த தாக்குதலுக்கு உள்ளானதன் பின்னர் சபையை விட்டு வௌியேறினார்.

இதன்போது, மக்களுக்காக கதைப்பவர்களுக்கு இவ்வாறு தான் நடைபெறுவதாக உபாலி ஆனந்த தெரிவித்தார்.

மேலும், பிரதேச சபையைக் கலைக்குமாறும் அவர் கோரினார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர் இந்திக ராஜபக்ஸ பின்வருமாறு தெரிவித்தார்

இன்று சபை கூடி அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது உபாலி ஆனந்த கடந்த சபை அமர்வில் யோசனை ஒன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை தொடர்பில் சபையில் குழப்பம் ஏற்பட்டது. மிகிந்தலை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உபாலி கதைத்தார் . இது தொடர்பில் கதைக்கும் போது தான் இவ்வாறான நிலை உருவாகியது. கல்லைக் கொண்டு வந்து தாக்கும் நிலை ஏற்பட்டது

தாக்குதலுக்கு உள்ளான உறுப்பினர் மிஹிந்தலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான உறுப்பினரின் உறவினர்கள் மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்