நல்லதண்ணி பகுதியில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

நல்லதண்ணி பகுதியில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

நல்லதண்ணி பகுதியில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 3:04 pm

Colombo (News 1st) ஹட்டன் – நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி விவசாயப் பண்ணையில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது.

சிறுத்தையின் உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டார்.

இதற்காக கருஞ்சிறுத்தையின் உடல் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திற்கு அனுப்பப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி – வாழைமலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கருஞ்சிறுத்தை மீட்கப்பட்ட விவசாயப் பண்ணையின் உரிமையாளரே கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த இந்த சிறுத்தை அருகிவரும் விலங்கினங்களில் ஒன்றாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்