தேசிய கண் வைத்தியசாலைக்கு முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிப்பு

தேசிய கண் வைத்தியசாலைக்கு முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிப்பு

தேசிய கண் வைத்தியசாலைக்கு முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 3:50 pm

Colombo (News 1st) தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோர் முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிகிச்சைகளைப் பெற வருகை தரும் நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக தேசிய கண் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

011 7 682 741, 011 7 682 554, 011 7 682 558 , 011 7 898 301 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முற்பதிவு செய்துகொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்