கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 3:21 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (30) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாகந்த வரையிலான நீர் விநியோகக் கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 02 , 03 , 07 , 08 , 09 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, கொழும்பு ஒன்றில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்