கருஞ்சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையை பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 7:21 pm

Colombo (News 1st) ஹட்டன் – நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் மீட்கப்பட்டு, உயிரிழந்த கருஞ்சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையை பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் முன்னெடுக்குமாறு நீதிமன்றத்தால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கருஞ்சிறுத்தை உயிரிழந்தது.

வாழைமலை தோட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி விவசாயப் பண்ணையில் இருந்து கருஞ்சிறுத்தை மீட்கப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கருஞ்சிறுத்தை மீட்கப்பட்ட விவசாயப் பண்ணையின் உரிமையாளரே கைது செய்யப்பட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்