கடற்படையை சேர்ந்த 708 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடற்படையை சேர்ந்த 708 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடற்படையை சேர்ந்த 708 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2020 | 3:42 pm

Colombo (News 1st) கடற்படையை சேர்ந்த 708 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 415 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் சமூகத்திற்கிடையில் 406 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

தொற்றுக்குள்ளான கடற்படையை சேர்ந்த உறுப்பினர்கள் தங்கியிருந்த முகாம்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேவையான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1530 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 745 பேர் குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்