அதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்புகள் ஆரம்பம் 

by Bella Dalima 29-05-2020 | 3:32 PM
Colombo (News 1st) நிர்ணயிக்கப்பட்டுள்ள சில்லறை விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள சில்லறை விலைக்கு அதிகபட்சமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலையில் நேற்று (28) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவிற்கான அதிகபட்ச சில்லரை விலை 120 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 98 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வௌ்ளை பச்சையரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 96 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சையரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை 93 ரூபாவாகும்.