by Staff Writer 28-05-2020 | 12:44 PM
Colombo (News 1st) எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 3 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.