Colombo (News 1st) 27/05/2020 ; 11.55 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 150 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 150 பேரில் 53 பேர் கடற்படையினராவர்.
ஏனைய 97 பேரும் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா நோயாளர்கள் 732 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.