சீரற்ற வானிலையால் நாசாவின் ரொக்கெட் பயணம் நிறுத்தம்

சீரற்ற வானிலையால் நாசாவின் ரொக்கெட் பயணம் நிறுத்தம்

சீரற்ற வானிலையால் நாசாவின் ரொக்கெட் பயணம் நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2020 | 2:08 pm

Colombo (News 1st) சீரற்ற வானிலை காரணமாக, Space X நிறுவனத்தினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாசாவின் விண்வெளி வீரர்களான Doug Hurley மற்றும் Bob Behnken ஆகிய இருவரும் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்படவிருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.

ரொக்கெட் புறப்படவிருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வை காண்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது பாரியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

9 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் இருந்து விண்வௌி வீரர்கள் அனுப்பப்படும் சந்தர்ப்பம் இதுவாகும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் சனிக்கிழமை விண்வௌி வீரர்களுடன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

தனியார் நிறுவனமான Space X உடன் இணைந்து முதல்தடவையாக நாசா முன்னெடுக்கும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல்தடவையாக Space X நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்