கொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்

கொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்

கொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2020 | 8:14 am

Colombo (News 1st) கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் முன்னாள் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள், வைத்தியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்