அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை கடந்தது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 May, 2020 | 11:11 am

Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 17,45,803 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 102,107 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானோரில் 490,130 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகின்ற நிலையில், பொருளாதாரத்தை மீளத்திறப்பதில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிக கவனம் செலுத்துவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேஸிலில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 125,000 ஐ எட்டுமென புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரேஸிலில் இதுவரை 414,661 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 25,697 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் 370,680 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு 3,968 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் பிரேஸிலை காட்டிலும் ரஷ்யாவில் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஸ்பெயினில் 283,849 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 27,118 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் 267,240 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன் 37,460 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 158,333 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4,534 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் 57,92,314 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 357,471 பேர் உயிரிழந்துள்ளனர்.

24,98,884 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ரொக்ஸி குளோரோகுயினை, கொரோனா வைரஸூக்கான மருந்தாக கொடுப்பதையும் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்