அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி…

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி…

எழுத்தாளர் Staff Writer

28 May, 2020 | 1:18 pm

Colombo (News 1st) மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இன்று (28) அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பூதவுடல் தாங்கிய பேழையை பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

இதன் பின்னர் பாராளுமன்ற கட்டடத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பாரியாருடன் இணைந்து மலர் வளையத்தை வைத்து முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைசர்கள் என பலரும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்