ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 27-05-2020 | 12:17 PM
Colombo (News 1st) நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தறை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அந்தவகையில், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கிரிஎல்ல, கொடக்கவெல்ல, கஹவத்த, கொலன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளுக்கும் கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளை காலி மாவட்டத்தின் நெலுவ மற்றும் களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை மற்றும் இங்கிரிய, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், நிலவும் மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்டை, இரத்தினபுரி, கலவான, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, தெஹியோவிட்ட, புலத்கொஹூபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறயுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் நாட்டின் ஏனைய மலைப்பாங்கான பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து வீழ்தல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அறிகுறிகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.