நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 8:14 am

Colombo (News 1st) தென், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், இன்று (27) காலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் எஹலியகொடயில் 180 மில்லிமீற்றரில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பாலிந்தநுவர பகுதியில் 148 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் இங்கிரிய பகுதியில் 144 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்