கொரோனா மரணங்களை நினைவுகூர்ந்து ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

கொரோனா மரணங்களை நினைவுகூர்ந்து ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

கொரோனா மரணங்களை நினைவுகூர்ந்து ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 May, 2020 | 11:13 am

Colombo (News 1st) ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus Montero) தெரிவித்துள்ளார்.

குறித்த துக்கதின நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ள பொதுக் கட்டடங்கள் , கடற்படையின் கப்பல்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்தத் துக்க தின அனுஷ்டிப்புகள் ஸ்பெயின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நிகழ்வுடன் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் 26,834 உயிரிழந்துள்ளதோடு, 235,400 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்