ஊரடங்கு சட்டத்தை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 9:43 am

Colombo (News 1st) நேற்றிரவு (26) 10 மணி முதல் இன்று (27) அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 81 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 18,695 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்