ஸ்பெயினில் வௌிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறுத்தம்

ஸ்பெயினில் வௌிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறுத்தம்

ஸ்பெயினில் வௌிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 12:13 pm

Colombo (News 1st) வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோரை 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவுள்ளதாக ஸ்பெய்ன் அரசு அறிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் தளர்த்தப்படுமென ஸ்பெய்ன் வௌிவிவகார அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், குறிப்பிட்ட திகதியினை அவர் அறிவித்திருக்கவில்லை.

ஸ்பெயினுக்கு வருடாந்தம் 80 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.

அந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 12 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பினை சுற்றுலாத்துறை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்