வௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்த 113 பேருக்கு கொரோனா தொற்று 

வௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்த 113 பேருக்கு கொரோனா தொற்று 

வௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்த 113 பேருக்கு கொரோனா தொற்று 

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 9:45 am

Colombo (News 1st) வௌிநாடுகளிலிருந்து அண்மையில் நாட்டிற்கு வந்த 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளிலிருந்து கடந்த வாரம் இலங்கைக்கு திரும்பியவர்களில், குவைத்திலிருந்து வந்த 90 பேர் மற்றும் துபாயிலிருந்து வருகைதந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவிலிருந்து வந்த இருவர் மற்றும் மலேஷியா, இந்தோனேஷியா, இந்தியாவிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், முதற்கட்டத்தில் நாட்டிற்கு வரவழைத்திருந்தவர்களில் இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 34 பேர், பிரித்தானியாலிருந்து வருகைதந்த மூவர் மற்றும் ஓமானிலிருந்து திரும்பிய மூவர் உள்ளிட்ட 40 பேருக்கு தொற்று இருந்தமை கண்டறியப்பட்டதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்