நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தில் கருஞ்சிறுத்தை கண்டுபிடிப்பு

நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தில் கருஞ்சிறுத்தை கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 May, 2020 | 3:01 pm

Colombo (News 1st) நல்லதண்ணி – லக்ஷபான தோட்டத்தில் கருஞ்சிறுத்தை (Black panther) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லக்ஷபான தோட்டம் – வாழைமலை பிரிவிலுள்ள விவசாய பண்ணையில் இன்று இந்த கருஞ்சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தை சேர்ந்த, மிருகங்களுக்கு நினைவிழக்க செய்யும் ஊசிமருந்து ஏற்றும் வைத்தியர்கள் வரும் வரை குறித்த பகுதியில் கருஞ்சிறுத்​தையை வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்