தேர்தல் சட்டங்களை மாற்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: சஜித் பிரேமதாச கோரிக்கை

தேர்தல் சட்டங்களை மாற்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: சஜித் பிரேமதாச கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 7:53 pm

Colombo (News 1st) பொதுத்தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வலியுறுத்தினார்.

புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கடந்த நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், சிறந்த அறிவுப்பூர்வமான அனுகூலமான தீர்வு என்ன ? உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டி சபையின் ஊடாக இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும். பாராளுமன்ற அனுமதியின் பிரகாரம் தேர்தல் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு உரிய முறையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்