கொரோனா நோயாளர்களை அழைத்துச்சென்ற அம்பியுலன்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொரோனா நோயாளர்களை அழைத்துச்சென்ற அம்பியுலன்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 8:28 pm

Colombo (News 1st) இரண்டு அம்பியுலன்ஸ்கள் இன்று பிற்பகல் ஹோமாகமவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

மின்னேரியா இராணுவ தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து கொரோனா நோயாளர்களை அழைத்துச்சென்ற 7 அம்பியுலன்ஸ்கள் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளன.

இதன்போது, அந்த அம்பியுலன்ஸ்கள் ஹோமாகம நகரில் விபத்திற்குள்ளான காட்சிகள் CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.

நான்கு அம்பியுலன்ஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இதேவேளை, கொரோனா தொற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு மூவரை அழைத்துச் சென்ற அம்பியுலன்ஸ் ஒன்றும் டிப்பர் ஒன்றும் யாழ். புத்தூர் சந்திக்கருகில் இன்று விபத்திற்குள்ளாகின.

பின்னர் அவர்கள் மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்போது, வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்