இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு

இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு

இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2020 | 7:10 am

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று (26) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது.

இதனையடுத்து, நாள் தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந் நடைமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களிலும் பயணிகள் போக்குவரத்தின் போதும் சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவௌியை பேணுதல் என்பனவும் இதில் அடங்குகின்றன.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு அழைப்பவர்கள் தொடர்பிலும் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்