மேல் மாகாணத்தில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது

மேல் மாகாணத்தில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது

மேல் மாகாணத்தில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 May, 2020 | 3:19 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) காலை 6 மணி முதல் இன்று (25) காலை 6 மணி வரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயினுடன் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்