டிக்கோயாவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு

டிக்கோயாவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 May, 2020 | 2:32 pm

Colombo (News 1st) ஹற்றன் – டிக்கோயா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (25) முற்பகல் டிக்கோயா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

48 வயதான பெண் தொழிலாளி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளார்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 8 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.

குறித்த 8 பேரும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்