கொரோனா தொடர்பில் தென்னாபிரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

கொரோனா பரவல் தொடர்பில் தென்னாபிரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

by Staff Writer 25-05-2020 | 3:15 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையுமென அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷ (Cyril Ramaphosa) எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்னாபிரிக்காவில் 22,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கினர் கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது நடைமுறையிலுள்ள முடக்கல் கட்டுப்பாடுகள் காலவரையறையின்றி நீடிக்கப்படாது என தென்னாபிரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தநிலையில் அடுத்த மாதம் முதலாம் திகதி மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.