இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

by Staff Writer 23-05-2020 | 7:57 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியினால் இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து அச்சிடப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 244.12 பில்லியன் ரூபாவாகும். மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
எந்த ஒரு மத்திய வங்கியினதும் முதன்மை பொறுப்பு பணப்புழக்கத்தை பேணுவதாகும். நாங்கள் அரச பிணையங்களை கொள்வனவு செய்துள்ளோம். எமது இருப்புக்கள் குறைவடைகின்றன. சந்தையில் பணப்புழக்கம் குறைவடைந்து செல்கின்றது. அதற்கு பணப்புழக்கத்தன்மை மற்றும் மேலதிக பணப் புழக்கத்தினை வங்கிகளுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் நாங்கள் கையளும் வழிமுறையாக முதன்மை சந்தை, மற்றும் இரண்டாம் நிலை சந்தையில் பிணை முறிகளை கொள்வனவு செய்தலாகும். இதனூடான பணவீக்கத்தினை 4-இலிருந்து 6 வீதத்திற்கு மட்டுப்படுத்த முடியும். இது எங்களுக்கு பாரிய பாதக நிலை இல்லை.