இந்தியாவில் 1,25,101 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 23-05-2020 | 4:08 PM
Colombo (News 1st) இந்தியாவில் இதுவரை இல்லாதளவிற்கு மிக அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 6088 தொற்றாளர்கள் நேற்று முன்தினம் புதிதாக அடையாளங்காணப்பட்ட நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில், 6,654 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 137 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3720 ஆக உயர்வடைந்துள்ளது. மஹாராஷ்ட்ராவிலேயே அதிகளவிலான தொற்றாளர்களும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,582 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1517 ஆகவும் அதிகரித்துள்ளன. அதற்கடுத்து, அதிகளவிலான தொற்றாளர்கள் தமிழகத்திலேயே பதிவாகியுள்ளனர். தமிழகத்தில் 14 ,753 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 98 மரணங்களும் சம்பவித்துள்ளன. இந்தியா முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையிலும், வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவது தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.