ரிஸ்வானின் முயற்சியும் இறுதி மூச்சும் காலம் கடந்தும் ஜீவியம் பெறும்!

ரிஸ்வானின் முயற்சியும் இறுதி மூச்சும் காலம் கடந்தும் ஜீவியம் பெறும்!

எழுத்தாளர் Staff Writer

23 May, 2020 | 8:16 pm

Colombo (News 1st) தன்னுயிரை மாய்க்க முயன்ற யுவதியைக் காப்பாற்ற இன்னுயிரைத் துச்சமென எண்ணி விரைவாக செயற்பட்ட ரிஸ்வான் இன்று எம்மத்தியில் இல்லை.

தற்கொலை செய்வதற்கு முயற்சித்த யுவதியைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரிஸ்வானின் புகழுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற யுவதியைக் காப்பாற்றும் முயற்சியில் ரிஸ்வான் உயிரிழந்தார்.

லிந்துலை பாமஸ்டர்ன் ரத்னகிரிய பொது மயானத்தில் ரிஸ்வானின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எனினும், தற்கொலையை முறியடித்த ரிஸ்வானின் முயற்சியும் இறுதி மூச்சும் காலம் கடந்தும் ஜீவியம் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்