பொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை

பொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை

பொலன்னறுவையிலுள்ள அரிசி ஆலைகளில் விசேட சோதனை

எழுத்தாளர் Staff Writer

23 May, 2020 | 9:20 pm

Colombo (News 1st) பொலன்னறுவையிலுள்ள பாரிய அரிசி ஆலைகள் சில இன்று நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரிசி ஆலைகள் தொடர்பில் ஆராய்வதாக நுகர்வோர் அதிகார சபையினர் நேற்று (22) தெரிவித்தமைக்கு இணங்க இன்று கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரலிய அரிசி உற்பத்தி ஆலை இன்று கண்காணிக்கப்பட்டபோது அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை, அரிசி வர்த்தகர்கள் சிலர் ஒன்றிணைந்து நாட்டில் செயற்கையான அரிசித் தட்டுப்பாட்டை தோற்றுவித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சில அரச அரிசி ஆலைகளை ஆரம்பித்து சர்வாதிகாரப் போக்கினை முடிவிற்குக் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்