பாடசாலைகளுக்கு உடல் வெப்பமானி, முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம்

பாடசாலைகளுக்கு உடல் வெப்பமானி, முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம்

பாடசாலைகளுக்கு உடல் வெப்பமானி, முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

23 May, 2020 | 3:01 pm

Colombo (News 1st) அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய, கால்களால் இயக்கக்கூடிய கைகழுவும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடுகளுக்காக 630 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்