கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான 1500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான 1500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான 1500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

23 May, 2020 | 3:56 pm

Colombo (News 1st) ஊரடங்கு உத்தரவினால் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளானவர்களில் சுமார் 1500 பேர் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வடகொழும்பு பகுதியில் தங்காலிகமாக தங்கியிருந்தவர்களே இன்று அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுகததாச விளையாட்டரங்கிற்கு இவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதன் பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 42 பஸ்களில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஊரடங்கு உத்தரவினால், மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்தவர்களில் இதுவரை 16,000 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்