ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 May, 2020 | 3:15 pm

Colombo (News 1st) இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 138 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 62,162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 17,460 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு மீறப்பட்டமை தொடர்பில் 18,992 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 7,387 வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்