இந்திய மக்கள் நாடு திரும்ப சந்தர்ப்பம்

இலங்கையிலுள்ள இந்திய மக்கள் நாடு திரும்ப சந்தர்ப்பம்

by Bella Dalima 22-05-2020 | 7:48 PM
Colombo (News 1st)  வெளிநாடுகளிலுள்ள இந்திய பிரஜைகளை தாயகத்திற்கு அழைத்துவரும் நோக்கில் "வந்தே பாரத்" செயற்திட்டம் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கையிலுள்ள இந்தியப் பிரஜைகளை அழைத்துச் செல்வதற்காக இந்திய கடற்படையின் கிழக்கு கரையான விசாகப்பட்டினத்திலிருந்து ஜலஸ்வா கப்பல் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இலங்கையிலுள்ள தமிழகத்தின் நிரந்த வதிவாளர்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி ஜலஸ்வா கப்பலில் நாடு திரும்ப முடியும். இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான AI 0276 என்ற விமானம் கொழும்பை வந்தடையவுள்ளது. "வந்தே பாரத்" செயற்றிட்டத்தின் கீழ் நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியுள்ள பாரத பிரஜைகளை தாயகத்திற்கு திருப்பி அழைக்கும் நோக்கில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது. "வந்தே பாரத்'' திட்டம் இந்திய வரலாற்றில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டம் என இந்தியா தெரிவித்துள்ளது.